தம்மீது குற்றச்சாட்டு சுமத்துவதை நிறுத்தவீர்

தமது கணவரும், சரவா மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான துன் அப்துல் தைப் மஹ்மூத், கூச்சிங்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், மருத்துவர்களின் ஆலோனையை மீறி பலவந்ததமாக வெளியேற்றப்பட்டுள்ளார் என்று கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தம் மீது வீண் பழி சுமத்துவதை அனைத்து தரப்பினரும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அந்த ஆளுநரின் மனைவி தோ புவான் ரகாத் குர்தி தைப் கேட்டுக்கொண்டார்.

சிரியா, டமாஸ்கஸ்- ஸில் பிறந்து வளர்ந்தவரான ரகாத் குர்தி, கடந்த 2010 ஆம் ஆண்டு தமது 30 ஆவது வயதில் 73 வயதுடைய அப்துல் தாயிப் மஹ்மூத் – கரம் பிடித்தார்.

தற்போது 87 வயதான அப்துல் தாயிப் மஹ்மூத் உடல் சுகவீனப்பட்டுள்ள நிலையில் கடந்த மாதம், சரவா மாநில ஆளுநர் பதவியிலிருந்து விலகினார்.

இந்நிலையில், வயதான தனது கணவர் அப்துல் தாயிப் மஹ்மூத்- டை, கைவிட்டு, வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தமக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள கதையை நம்ப வேண்டாம் என்று தமது 44 வயதுடைய ரகாத் குர்தி குறிப்பிட்டார்.

தாம் ஓர் அந்நிய நாட்டுப் பெண் என்றாலும் தற்போது தாம் ஒரு மலேசியப் பிரஜை என்று ரகாத் குர்தி ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

தவிர தமது கணவரை பலவந்தமாக மருத்துவமனையிலிருந்து தாம் வெளியேற்றியதாக கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்