போலியான அடையாள அட்டையை பயன்படுத்திய தம்பதியர்

கோத்தா டாமான்சாரா, மார்ச் 14 –

கோத்தா டாமான்சாரா வில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது கடந்த 10 வருடங்களாக போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பணிபுரிந்து வந்த பிலிப்பைன்ஸ் தம்பதியர்கள் பிடிப்பட்டனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டில் சம்பந்தப்பட்ட தம்பதியர்கள் ஜொகூர் பாருவின் வழியாக மலேசியாவிற்கு குடிநுழைந்திருப்பதாக தேசிய பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் வெளிநாட்டு பிரஜைகள் 350 வெள்ளியிலிருந்து 500 வெள்ளி வரையில் கட்டணத் தொகை செலுத்தி போலியான அடையாள அட்டையை வாங்கியிருப்பதாக நம்பப்படுகின்றது.

சம்பந்தப்பட்ட அந்த தம்பதியர்கள் வேலை தேடுவதற்காக போலி அடையாள அட்டையை பயன்படுத்தி வந்ததாகவும் முன்பாக ஜொகூரில் ஒரு சவக்கார தொழிற்சாலையில் பணிப்புரிந்து வந்த வேளையில் தற்போது போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி பாதுகாப்பு காவலர்களாக வேலை செய்துவருவது தெரியவந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்