பினாங்கு அரசு ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றமில்லை

ஜோர்ஜ் டவுன், மார்ச் 14 –

நோன்பு மாதத்தை தொடர்ந்து, பினாங்கு அரசு பணியாளர்களின் வேலை நேரத்தில் எந்தவொரு மாற்றம் இல்லை என்றும் வழக்கம் போல மாலை 4 மணிக்கு பணிகள் முடிந்து வீடு திரும்புவர் என்று பினாங்கு மாநில அரசு நேற்று அறிவித்துள்ளது.

அம்மாநிலத்தில் பணிப்புரியும் அரசு ஊழியர்கள் ரமாடான் மாதத்தில் அவர்களுக்கு ஏற்புடைய வேலை நேரத்தில் பணிக்கு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் யியாவ் தெரிவித்தார்.

பகாங் மாநிலத்தில் அரசு தொழிலாளர்கள் வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் வீட்டிற்கு சீக்கிரமாக செல்வதற்கு அம்மாநில அரசாங்கம் அனுமதித்த வேளையில் பினாங்கில் பணியாளர்களின் பணித்தன்மை நேரத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று இதுக்குறித்து எழுந்த விவாதத்திற்கு பதிலளிக்கும் வகையில் சௌ இவ்வாறு விளக்கமளித்தார்.

மஸ்ஜிட் கபிதான் கெலிங் கில் பினாங்கு மாநிலத் தலைவர் துன் அகமாட் புசி அப்துல் ராசாக் Tun வுடனான Tarawih தொழுகை மற்றும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் சௌ தெளிவுப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்