போலியான பிடி வாரண்ட் மூலம் மோசடி

WhatsApp , Telegram ஆகிய தொடர்புத் தளங்களில் காவல் துறையின் போலியான பிடி வாரண்ட் அனுப்பி மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெருய வந்துள்ளது.

இது குறித்து தகவல் அளித்த புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி இயக்குநர் Rohaimi Md Isa குறிப்பிடுகயில், Unit Khas Pasukan B-19 JSJK என்ற தலைப்பில் புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமை பதிவர் அலுவலகம் வெளியிட்ட பிடி வாரண்ட் எனக் குறிப்பிட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

அதன்படி, 24 மணி நேரத்திற்குள் குற்றவாளி எனக் குறிப்பிடப்படும் நபர் போலீசாரால் கைது செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இவ்வாறான வாரண்டை போலீஸ் பெற்றது கிடையாது எனக் குறிப்பிடும் Rohaimi, இந்தப் போலியான வாரண்ட் மோசடி குறித்து பொது மக்கள் பாதுகாப்பாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்