போலி ஆசிரியருக்கு 10 மாத சிறை

கெனிங்கௌ, பிப்ரவரி 22 –

மற்றவருக்கு சொந்தமான போலி அடையாளகார்டை பயன்படுத்தி கடந்த 29 ஆண்டுகளாக பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி, மோசடி புரிந்த ஆடவர் ஒருவருக்கு சபா, கெனிங்கௌ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 10 மாத சிறை மற்றும் 6 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.

53 வயதுடைய ரீடால் அப்துல் காடிர் என்ற நபர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் நூர் அன்ஸ்ரஃப் ஜோல்ஹானி இத்தண்டனையை விதித்தார்.

கடந்த ஜனவரி 29 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் ஆசிரியர்கள் குடியிருப்புப்பகுதியில் அந்த நபரின் வீட்டிலும், காரிலும் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்ட போது ரீடால் அப்துல் காடிர் என்ற பெயரில் அவர் பயன்படுத்திய அடையாள கார்டு போலியானது என்று கண்டு பிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக தேசிய பதிவு இலாகாவான ஜ.பி.ன் னில் பரிசோதனை செய்யப்பட்ட போது அந்த நபர், மலேசியப் பிரஜை எனும் போலி அடையாள கார்டை பயன்படுத்தி வருவது கண்டு பிடிக்கப்பட்டது.

தவிர இதே பெயரில், அடையாளக் கார்டு எண்ணின் தற்காலிக வசிப்பிட அந்தஸ்துக்கான அடையாள அட்டையை தேசிய பதிவு இலாகா வெளியிட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த போலி ஆசிரியரின் குட்டு அம்பலமானது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்