போலீஸ் நிலைய தாக்குதலுக்கும், அரண்மனையில் அத்துமீறல் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை

புத்ராஜெயா, மே 23-

அண்மையில் ஜோகூர், உலு திராம் மற்றும் பினாங்கு கெராமட் ஆகிய இரண்டு போலீஸ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கும், இஸ்தானா நெகாரா-விற்குள் அத்துமீறி நுழைய முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைப்புடின் நசுட்டின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் மேற்கண்ட சம்பவங்களுக்கும், செப்புதே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக்- கிற்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் சம்பவத்திற்கும் தொடர்புயில்லை என்பதையும் சைபுடின் விளக்கினார்.

இந்த நான்கு சம்பவங்களும் ஒன்று, மற்றொன்றுடன் தொடர்புயில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பினாங்கு, டத்தோ கிராமாட் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து, போலீசாரை தாக்கியதுடன் HK MP5 ரகத்திலான மிஷின்கன் துப்பாக்கியை பறிக்க முயற்சி செய்த சம்பவம், முழுக்க முழுக்க மதுபோதையில் இருந்த ஒரு நபரினால் மேற்கொள்ளப்பட்டதாகும் என்று சைபுடின் இன்று விளக்கினார்.

அரசாங்கப்பணியாளரின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக அந்த நபர் கடந்த வாரம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருப்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்