உயரிய விருதை வென்றார் மலேசிய மாணவர்

ஹார்வர்ட், மே 23-

அமெரிக்காவில் ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் சட்டத்துறைக்கான முனைவர் பட்டப்படிப்பு மாணவரான மலேசியாவைச் சேர்ந்த அர்ஜுன் கணநாதன், 2024 ஆம் ஆண்டுக்கான Ralph D. Gants Access to Justice விருதை வென்றுள்ளார்.

நீதி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு மாணவனை அங்கீகரிக்கும் வகையில் அமெரிக்காவில் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.

அமெரிக்காவின் உச்சநீதிமன்ற நீதிபதியான மறைந்த மாசசூசெட்ஸ் மற்றும் சமூக நீதிக்கான வழக்கறிஞரான ரால்ப் டி. ஜெண்ட்ஸ் ஆகியோரை கெளரவிப்பதற்காக அவர்களின் பெயரில் இந்த விருது கடந்த 2021 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

ஹார்வர்ட் சட்டக்கல்லுரியில் இந்த உயரிய விருது பெறுவதை ஒரு வரப்பிரசாதமாக கருதுவதாக 24 வயதுடைய மலேசிய மாணவன் அர்ஜுண் தெரிவித்தார். சட்டத்துறையில் குறிப்பாக வசதி குறைந்த தனது கட்சிக்காரர்களுக்கு நீதி கிடைப்பதற்காக போராடி வரும்
அர்ஜுணின் சமூகவியல் பங்களிப்பை கருத்தில் கொண்டு அவருக்கு இந்த மதிப்புமிகுந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

எந்தவொரு வழக்கிலும் சிக்கலான பிரச்னைகளை இரு பக்கங்களில் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதில் அர்ஜுண் மிகப்பெரிய அறிவு ஜீவி என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்