மகனை மிரட்டி வருகின்றனர் என்கிறார் துன் மகாதீர்

ஐந்து ஆண்டு சிறையில் தள்ளுவோம் என்று கூறி தமது மகன் மிரட்டப்பட்டு வருவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கூறுகிறார்.

அரசியல் எதிரிகள் தற்போது தமக்கு எதிராக அநீதியை இழைக்கத் தொடங்கியுள்ளனர் என்று குற்றஞ்சாட்டிய துன் மகாதீர், தற்போது தமது மகன் மிரட்டப்பட்டு வருவதாக இன்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

துன் மகாதீரின் மூத்த புதல்வரான 63 வயது மிர்ஸான் மகாதீர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது குறித்து கருத்துரைக்கையில் அந்த முன்னாள் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமது தந்தையார் துன் மகாதீர், நாட்டின் பிரதமராக இருந்த கால கட்டத்தில் அரசாங்க சார்பு நிறுவனங்களான GLC – யின் சொத்துக்களை வாங்கி விற்பதில் மிர்ஸான் மகாதீர் பெரும் செல்வந்தராக உருவெடுத்தார் என்று அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்களின் சொத்து விவரங்களை அம்பலப்படுத்தி வரும் Panama Papers அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தது.

இதன் தொடர்பில் மிர்ஸான் மகாதீர் அடுத்த 30 நாட்களுக்குள் தனது சொந்து விவரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மிடம் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்