துன் சாமிவேலு நாட்டிற்கு விசுவாசமாக இல்லை என்கிறாரா துன் மகாதீர்? – லிம் கிட் சியாங் கேள்வி

நாட்டிற்கு தாம் தலைமையேற்று இருந்த காலத்தில் தமது அமைச்சரவையில் நீண்ட காலம் அமைச்சராக இருந்த முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரும், முன்னாள் மஇகா தேசியத் தலைவருமான துன் எஸ். சாமிவேலு, நாட்டிற்கு விசுவாசமாக இருந்ததில்லை என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது சொல்ல வருகிறாரா? என்று DAP மூத்த தலைவர் Lim Kit Siang கேள்வி எழுப்பியுள்ளார்.

துன் மகாதீரின் கூற்றுப்படி, மலேசிய இந்தியர்கள் இந்த நாட்டிற்கு விசுவாசமாக இல்லை என்றால் துன் சாமிவேலுவும் நாட்டிற்கு விசுவாசமாக இல்லை என்றே பொருள்படும்.

அப்படியென்றால், தமது 22 ஆண்டுக்கால ஆட்சியில் தமது தலைமைத்துவத்தின் கீழ் நாட்டிற்கு விசுவாசமற்ற துன் சாமிவேலுவைதான், தமது அமைச்சரவையில் துன் மகாதீர், பதவியில் அமர்த்தி இருந்தாரா? என்று லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பினார்.

இந்த நாட்டிற்கு இந்தியர்களும் , சீனர்களும் விசுவாசமாக இல்லை என்பதைப் போல் சித்திரித்து வரும் துன் மகாதீரை கடுமையாக சாடிய லிம் கிட் சிங், பல்லின மக்கள் வாழ்க்கின்ற ஒரு தேசத்தில் அவர்களை அந்நியப்படுத்துவதற்கு பிரித்தாளும் போக்கை கையாளுவதை துன் மகாதீர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

காரணம், மலேசியர்களை ஒன்றுப்படுத்துவதற்காகவும், அவர்களின் தூர நோக்கு லட்சியத்தை நிறைவு செய்வதற்காகவும் துன் மகாதீர் Wawasan 2020 என்ற தூர நோக்கு லட்சியத்தை கொண்டு வந்ததாக கூறினார்.

ஆனால், அந்த தூர நோக்குத் திட்டம், முழுக்க முழுக்க பித்தலாட்டம் நிறைந்தது என்பதை துன் மகாதீர் அண்மைய காலமாக வெளியிட்டு வரும் அறிக்கைகளின் வாயிலாக அதனை நிரூபித்து வருகிறார் என்று லிம் கிட் சியாங் குற்றஞ்சாட்டினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்