மகளை 8 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் புரிந்த தந்தைக்கு 20 ஆண்டு சிறை 5 பிரம்படித் தண்டனை

போர்ட்டிக்சன் வட்டாரத்தில் தனது சொந்த மகளை 12 வயதிலிருந்து 20 வயது வரையில் பாலியல் பலாத்காரம் புரிந்து வந்த தந்தை ஒருவருக்கு சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 20 ஆண்டு சிறை மற்றும் 5 பிரம்படித் தண்டனை விதித்தது.

44 வயதுடைய தனது சொந்த தந்தையின் இந்த வக்கிர செயலினால், இரண்டு பிள்ளைகளை பிரசவித்து, மனப்பாதிப்புக்கு ஆளாகியுள்ள 20 வயது பெண்ணுக்கு நேர்ந்த துயரத்திற்கு காரணமான அந்நபருக்கு நீதிமன்றம் இன்று கடும் தண்டனையை விதித்துள்ளது.

சிறுவயது முதல் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து வெளியில் செல்ல முடியாமலும், போலீசில் புகார் செய்ய இயலாமலும் பரிதவித்து வந்த அந்த இளம் பெண், போதைப்பொருள் வழக்கு தொடர்பாக தனது தந்தையும், தாயாரும் வீட்டில் கைது செய்யப்பட்ட போது, தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை போலீசுக்கு தெரிவித்ததைத் தொடர்ந்து இவ்விவகாரம் அம்பலத்திற்கு வந்தது.

அந்த இளம் பெண் பிரசவித்த இரண்டு குழந்தைகளில் ஒன்று இறந்து விட்ட நிலையில் மற்றொரு குழந்தையை தனக்கு தெரியாமலேயே தனது பெற்றோர் மற்றவரிடம் கொடுத்து விட்டதாக தனது போலீஸ் புகாரில் அப்பெண் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபரின் இந்த ஒழுக்கக்கேடான செயலை கடுமையாக கண்டித்த செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி Kamil Nizam, பிள்ளைகளை நன்கு பாதுகாத்து பொறுப்புடன் வளர்க்க வேண்டிய ஒரு தந்தை, எதிர்மாறாக நடந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாத கடும் குற்றமாகும் என்றார்.

தற்போது உறவுக்காரர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள அந்த இளம் பெண்ணுக்கு தேவையான பராமாரிப்புகளை வழங்குவதற்கு சமூக நல இலாகா முனைந்துள்ள நிலையில் அந்தப் பெண்ணின் தந்தையும், 45 வயது தாயாராரும் போதைப்பொருள் வைத்திருந்ததாக இன்று மற்றொரு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்