மடானி மருத்துவச் சேவைத் திட்டம் நிறுத்தப்பட்டதா?

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 1 –

அரசாங்கம் அறிமுகப்படுத்திய மடானி மருத்துவச் சேவைத் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுவதை சுகாதார அமைச்சர் டத்துக் ஶ்ரீ சுல்கிப்லை அகமட் மறுத்துள்ளார்.

மாறாக, மடானி மருத்துவச் சேவைத் திட்டம், தனியார் கிளினிக்குளின் ஒத்துழைப்புடன் ஆபத்து அவசர வேளைகளில் நோயாளிகள் இட நெரிசலை எதிர்நோக்கியுள்ள பத்து மாவட்டங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார்.

மூன்று முக்கிய கூறுகளை அடிப்படையாக கொண்டு இத்திட்டம் தொடர்ந்து பேணப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை நிறுத்துவதற்கு அடிப்படை காரணங்களே இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

கோலாலம்பூர், கோம்பாக், உலு லங்காட், பெட்டாலிங், கிள்ளான், ஜொகூர்பாரு, கிந்தா, தீமோர் லாவுட், கோத்தா கினபாலு, கூச்சிங் ஆகியவையே அந்த பத்து மாவட்டங்களாகும் என்று அமைச்சர் டத்துக் ஶ்ரீ சுல்கிப்லை சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்