இராஜ இராஜேஸ்வரர் ஆலய சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு

சிராம்பான், மார்ச் 1 –

சிரம்பான், தாமான் துவான்கு ஜாபார் ரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீமகா இராஜ இராஜஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு நிகழ்வு, வரும் மார்ச் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.31 மணிக்கு வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.

அன்று வெள்ளிக்கிழமை இரவு 7.31 மணிக்குத் தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நான்கு கால சிவ வேள்வி மற்றும் 108 சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு செந்தமிழ் திருமறைகளால் நடைபெறவிருப்பதாக ஆலய நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

இந்த சிவராத்திரி பூஜையை வழிநடத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் வருகை தரவிருக்கிறார்.

முதல் சாமம், இரவு 7.31 மணிக்கும், இரண்டாம் சாமம், நள்ளிரவு 11.01 மணிக்கும், மூன்றாம் சாமம், விடியற்காலை 2.01 மணிக்கும், நான்காம் சாமம், அதிகாலை 4.01 மணிக்கும் நடைபெறும்.

*இந்த நான்கு சாமங்களிலும் மூத்த பிள்ளையார், சங்கல்பம் நீர்மலி வருணன் தீர்த்த வழிபாடு,

  • அம்மை அப்பர் திருக்குட வழிபாடு, 108 சங்கு பூஜை, சிவ வேள்வியுடன் நிறையவி நல்கள்,
  • அம்மை அப்பர் நன்னீராட்டு தரிசனம்
  • மற்றும் சிறப்பு பூஜை, 108 போற்றிகள், பன்னிரு திருமுறை விண்ணப்பம், பேரோளி தரிசனம், விபூதி பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.

ஆலயத்தின் சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு நிகழ்விற்கு, அடியார் பெருமக்கள் திரளாக வருகை தந்து இறைவனின் திருவருள் பெற்று இன்புறுமாறு ஆலய நிர்வாக சபையினர் கேட்டுக்கொள்கின்றனர். தொடர்புக்கு : 017-322 5400.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்