மதுபானம், சிகரெட் கடத்தல் ஆக மாறிய வீடு

பங்சாரில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது அவ்விடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை கைப்பற்றியதன் மூலம் சட்டவிரோத மதுபான விற்பனையை மலேசிய சுங்கத்துறை முறியடித்தது.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி பிற்பகல் 1:30 மணியளவில் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச மத்திய மண்டலத்தின் யூனிட் 1 உறுப்பினர்கள் மேற்கொண்ட ஓப் கொன்டாபன் சோதனையின் மூலம் அத்தகைய செயல்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டதாக மத்திய மண்டல சுங்கத்துறையின் உதவி இயக்குநர் நோர்லீலா இஸ்மாயில் தெரிவித்தார்.

இச்சோதனையில் 635,500 வெள்ளி மதிப்பிலான 15,320 லீட்டர் கொண்ட பல்வேறு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டதாக நோர்லீலா இஸ்மாயில் கூறினார்.

மேலும், விசாரணைக்கு உதவும் வகையில் அவ்வளாகத்தில் பாதுகாப்பு காவலராக பணிப்புரியும் 60 வயது முதியவரை கைது செய்திருப்பதாக நோர்லீலா இஸ்மாயில் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்