மன்னிப்பு கோரினார் ஙே

இஸ்லாமிய சட்டங்களை இயற்றுவதற்கான மாநில சட்டமன்றத்தின் திறனை மதிப்பாய்வு செய்வதற்கான சிறப்புக் குழுவில் முஸ்லிம் அல்லாதவர்ளையும் அரசாங்கம் நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரை குறித்து புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙே கூ ஹாம் மன்னிப்பு கோரியதுடன் அக்கூற்றை அவர் மீட்டுக் கொண்டார்.

இஸ்லாம் சமய விவகாரங்களில் தலையிடுவது தமது நோக்கம் இல்லை எனவும் சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் முன்னர் எல்லா தரப்பினரின் கருத்துகளையும் முழுதாய் கேட்கப்பட வேண்டும் எனவும் அவர் தமது தரப்பு விளக்கத்தையும் கொடுத்துள்ளார் ஙே.

அந்த சிறப்புக் குழுவானது மலேசிய இஸ்லாம் சமய விவகாரங்களுக்கான தேசிய மன்றத்தால் உறுவாக்கப்பட்டதாகும். அம்மன்றத்தின் தலைமைப் பொறுப்பில் சிலாங்கூர் மாநில சுல்தான் இருப்பதும் தாம் அறியத் தவறிவிட்டதாகவும் ஙே தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்