எச்சரித்த MyAirline

நாட்டின் மலிவு விலை விமான நிறுவனமான MYAirline சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள டிலையில், பயணிகளுக்கு டிக்கெட் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் நடவடிக்கை இன்னும் முடிவடையாத நிலையில் அவ்விவகாரம் குறித்து தற்பொழுது மோசடி நடவடிக்கைகள் நிலவி வருவதாகவும் இந்த மோசடி கும்பலிடம் பயணிகள் சிக்கி விட வேண்டாம் எனவும் அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மண்மையில், MYAirline பிரதிநிதி எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளரைத் தொடர்பு கொண்டிருப்பது குறித்து புகார் கிடைத்துள்ளது.

தொலைபேசி அழைப்பு, மின்னஞ்சல், குறுஞ்செய்தி எனப் பல வழிகளில் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்பதும் பணத்தைச் செலுத்தச் சொல்லும் நடவடிக்கைகள் தற்பொழுது அரங்கேறி வருவதாக MYAirlines தெரிவித்துள்ளது.

இவ்வாறான அழைப்புகள் குறித்து வாடிக்கையாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளும்போது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் பயன்படுத்தப்படும் என அந்நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்