மன்னிப்பு வாரியத்தின் முடிவு டத்தோ ஶ்ரீ நஜீப் பெரும் ஏமாற்றம்

தமக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத்தண்டனையை 6 ஆண்டுக்காலமாக குறைத்திருக்கும் மன்னிப்பு வாரியத்தின் முடிவை அறிந்து முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

இதனை டத்தோ ஶ்ரீ நஜீப்பின் புதல்வி Nooryana Najwa தெரிவித்தார்.

பொது மன்னிப்பு வாரியத்தின் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர், கடந்த வெள்ளிக்கிழமை தமது தந்தை நஜிப்பை பார்ப்பதற்கு சிறைச்சாலைக்கு சென்ற போது அவர் இத்தகைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாக Nooryana குறிப்பிட்டார்.

தமது தந்தையை பார்க்க செல்லும் போது அவர் கையில் ஒரு கடிதத்தை வைத்திருந்ததாக Nooryana விளக்கினார்.

அந்த கடிதம் மன்னிப்பு வாரியத்தின் கடிதமாகும். தமது தந்தையை நலம் விசாரித்தபோது அவர் மிகச் சோர்வாக காணப்பட்டதாக Nooryana மேலும் கூறினார்.

மன்னிப்பு வாரியத்தின் முடிவு எனது தந்தைக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது என்பதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று Nooryana விவரித்தார்.

முகம் களையிழந்து காணப்பட்டது. மிகவும் சோர்வாகவேதான் இருந்தார். மன்னிப்பு வாரியத்தின் முடிவை கேட்டு தூக்கமின்றி இருந்ததாக தெரிகிறது.

எனினும், அவருக்கு ஆறுதல் கூறி மனதை தேர்த்தியதாக Nooryana Najwa தமது instagram அகப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்