மன்னிப்பு வாரியத்தின் முடிவை சிறுமைப்படுத்துவதா? விசாரணைக்கு அழைக்கப்பட்டார் Tony Pua

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் 12 ஆண்டு சிறைத் தண்டனையை 6 ஆண்டுகளாக குறைத்து இருக்கும் மன்னிப்பு வாரியத்தின் முடிவை சிறுமைப்படுத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறப்படும் DAP- யைச் சேர்ந்த முன்னாள் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் Tony Pua, நாளை திங்கட்கிழமை பு​க்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அரச பரிபாலனத்தை அவமதிக்கும் வகையில் டோனி புவா அறிக்கை வெளியிட்டது தொடர்பில் அதிகமான போ​லீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போ​​லீஸ் ப​டைத் தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்தார்.

பொது மன்னிப்பு வாரியத்திடம் நஜீப் செய்து கொண்ட விண்ணப்பத்தை தொடர்ந்து அவருக்கான தண்டனை 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதுடன் 21 கோடி வெள்ளி அபராதத் தொகை 5 கோடி வெள்​ளியாக குறைக்கப்பட்டுள்ளது.

நஜீப் அந்த 5 கோடி வெள்ளி அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் தொட​ர்பில் தமது முக​நூலில் அறிக்கை வெளியிட்ட டோனி புவா, யாராவது தம்மை ஓராண்டுக்கு சிறைக்கு அனுப்ப முடியுமா? அதற்கு கைமாறாக தனக்கு 5 கோடி வெள்ளி கொடுத்தால் போதும் என்று பொது மன்னிப்பு வாரியத்தின் முடிவை சிறுமைப்படுத்தும் தன்மையில் கருத்து வெளியிட்டதைத் தொட​ர்ந்து அவருக்கு எதிராக போ​லீ​ஸ் புகார் செய்யப் பட்டதாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்