மருத்துவ தாதி, சுயநினைவு இழந்த நிலையில் கிடந்தார்

குவாலா பிலாஹ், ஏப்ரல் 20-

சாலையோரத்தில் தனது காரின் இயந்திரம் முடுக்கிவிடப்பட்ட நிலையில் காருக்கு வெளியே சாலையோரத்தில் மருத்துவ தாதி ஒருவர் சுயநினைவு இழந்த நிலையில் கிடந்தது நேற்று இரவு 10 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது.

நெகிரி செம்பிலான், குவாலா பிலாஹ், ஜோகூல் அருகில் ஜாலான் சிம்பாங் திகா டாங்கி சாலையோரத்தில் வெள்ளை நிற சீருடையை அணிந்திருந்த நிலையில் அந்த தாதி சுயநினைவு இழந்த நிலையில் கிடந்ததை கண்ட பொது மக்கள் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மிக நேர்த்தியாக உடை அணிந்திருந்த 30 வயது மதிக்கத்தக்க அந்த தாதி, கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுதாக குவாலா பிலாஹ் மாவட்ட துணை போலீஸ் தலைவர் சாஹ்ருல் அனுவார் அப்துல் வஹாப் தெரிவித்தார்.

மயங்கிய நிலையில் காணப்பட்ட அந்த தாதியை மருத்துவக்குழுவினர் சோதனையிட்ட போது அவர் தலையில் பலமாக தாக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவர் அம்புலன் வண்டியின் மூலம் கோல பிலா,துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சாஹ்ருல் அனுவார் குறிப்பிட்டார்.

அந்த மாது அளித்த பூர்வாங்க வாக்குமூலத்தின்படி அவர் கொள்ளையடிக்கப்படவில்லை என்றும் யாரோ ஒருவர் தலையிலேயே அடித்தது போல உணர முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

குவாலா பிலாஹ், ஜாலான் டாங்கி-யில் உள்ள துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் பணி முடிந்து, அந்த தாதி டுரியான் துங்கால்-லில் உள்ள தனது வீட்டிற்கு காரில், சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக சாஹ்ருல் அனுவார் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்