நிறைய தியாகங்களை புரிந்தவர் ஹனிப் ஒமார்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 20-

இன்று தமது 85 ஆவது வயதில் காலமான அரச மலேசிய போலீஸ் படையின் முன்னாள் தலைவர் துன் ஹனிப் ஒமார், போலீஸ் படையை வளப்படுத்துவதில் பெரும் பங்களிப்பை வழங்கியவர் ஆவார் என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் புகழாஞ்சலி சூட்டியுள்ளார்.

அரச மலேசியப் போலீஸ் படையின் தலைவராக 20 ஆண்டு காலம் சேவையாற்றியுள்ள ஹனிப் ஒமார், போலீஸ் படையில் நீண்ட காலம் தலைமைப்பொறுப்பை வகித்த பெருமைக்குரியவர் ஆவார் என்று IGP குறிப்பிட்டார்.

தம்முடைய சீரிய தலைமைத்துவத்தில் போலீஸகாரர்களின் நலனை பாதுகாப்பதில் போலீஸ் படையில் மிகப்பெரிய மாற்றங்களையும் ஹனிப் ஒமார் செய்துள்ளார். போலீஸ் படையில் புகழ்மிக்க தலைவராகவும் அவர் பார்க்கப்பட்டார் என்று டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.

அரச மலேசிய போலீஸ் படையின் நான்காவது IGP- யாக கடந்த 1974 முதல் 1994 வரை பதவி வகித்த டான்ஸ்ரீ ஹனிப் ஒமார், இன்று அதிகாலை 2.15 மணியளவில் காலமானார்.

ஷா ஆலல், செக்‌ஷன் 13 இல் உள்ள ஹனிப் ஒமார்-ரின் இல்லத்திற்கு வருகை தந்து, அவரின் நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.

ஹனிப் ஒமார்-ரின் இல்லத்தில் அவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியவர்களின் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலானாய்வுத்துறை போலீஸ் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன், சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர், ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Iqbal Ibrahim ஆகியோர் அடங்குவர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்