மலாக்காவில் 11 இடங்கள் இலவசமாக சுற்றி பார்த்தல்

மலாக்கா, பிப்ரவரி 23 –

மலாக்கா மாநிலத்தில் கடந்த செவ்வாய்கிழமை மலாயா கூட்டமைப்பு சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் பொது விடுமுறை வழங்கப்பட்டதால் 150, 000 க்கும் அதிகமான சுற்றுப்பயணிகள் மலாக்காவில் உள்ள 11 இடங்களை சுற்றி பார்த்தனர்.

இந்த நாளை முன்னிட்டு குறிப்பிடப்பட்ட 11 இடங்களிலும் இலவசமான நுழைவும், சேவைகளும் வழங்கப்பட்டதாக முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ராஃப் யூசோ தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி சுதந்திர நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்பட்ட நிகழ்விற்கு எதிர்பார்த்ததை விட அதிகமான பார்வையாளர்கள் வருகை புரிந்திருந்தது மனதிற்கு நிறைவாக இருந்ததாக ராஃப் யூசோகூறினார்.

இவ்விழாவை யாங் டி பெர்துவ னெகிரி துன் மொஹமட் அலி மொஹமாட் ருஸ்தம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

நாட்டில் வாழும் அனைத்து மக்களும் இன வேறுபாடின்றி ஒற்றுமையாகவும் உதவும் மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும் என்று ராஃப் யூசோ கேட்டு கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்