கொள்ளைக்கு காரணமாக இருந்தது பூனையா?

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 23 –

டாமான்சாரா,பன்டார் உத்தாமா வில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்திற்கு பூனைகளை விற்கப்படும் முறையே காரணம் என்று நம்பப்படுகிறது. இதுக்குறித்த காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகி வருகின்றது.

இச்சம்பவம் குறித்து கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி பாதிக்கப்பட்ட 26 வயதுடைய ஆடவர் புகார் அளித்திருப்பதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட துணை போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ம் ஹுசின் சுலேஹுதீன் சோல்கிஃப்லை தெரிவித்தார்.

அந்த புகாரை தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து கைத்தொலைபேசி, பிரிட்டிஷ் ஷார்ட் ஹேர் மற்றும் மஞ்ச்கின் ஆகிய பூனைகள், பூனையின் பைகள், ஹொன்டா சீவிக் வாகனத்தின் சாவி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாக ஹுசின் சுலேஹுதீன் கூறினார்.

கைது செய்யப்பட்ட 27, 29 வயதிற்கு உட்பட்ட அந்நபர்கள் மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரியவந்ததாக ஹுசின் சுலேஹுதீன் விளக்கினார்.

மேலும் அந்நபர்கள் குற்றவியல் சட்டம் 395 / 397 பிரிவின் கீழ் பிப்ரவரி 23 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஹுசின் சுலேஹுதீன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்