மலாய்க்காரர்களின் ஆதரவை பெற்றால் மட்டுமே PKR ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க முடியும்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 17-

PKR-ரும் பக்காத்தான் ஹாராப்பானும் ஆட்சி அதிகாரத்தில் நீடிப்பதற்கு அதன் அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே சார்ந்திருக்க முடியாது. மாறாக, எதிர்க்கட்சியை ஆதரிக்கும் வலது சாரி மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதும் முக்கியம் என உம்னோ இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் கைரி ஜமாலுதீன் வலியுறுத்தினார்.

மலாய்க்காரர்களின் மனங்களை PKR-ரும் பக்காத்தான் ஹாராப்பானும் வெல்லாவிட்டால், அரசாங்கத்தை அமைப்பதற்கு, அத்தரப்பினர் உம்னோ மற்றும் PAS கட்சியை தொடர்ந்து சார்ந்திருக்க வேண்டியதுவரும் என Keluar Sekejap Podcast கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கைரி கூறினார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான PKR, இதற்கு முன்பு, பல சீர்த்திருத்த கொள்கைகளை வாக்குறுதியாக வழங்கிய நிலையில், ஒற்றுமை அரசாங்கம் அமைந்த பிறகு, அக்கொள்கைகளை தீவிரப்படுத்தாமல் அக்கட்சி உள்ளது.

அத்தகைய போக்கு இனியும் தொடர்ந்தால், யாரும் PKR-ரை சீர்த்திருத்த கொள்கையுடைய கட்சியாக பார்க்க மாட்டார்கள் எனவும் சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சருமான கைரி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்