மலாய்க்காரர்கள் ஒன்றுபடவில்லையென்றால் அடுத்த 10 ஆண்டுகளில் அடையாளம் தெரியாமல் போய் விடுவார்கள்

மலாய்க்காரர்கள் இப்போது முதல் ஒன்றுப்படவில்லை என்றால் அவர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் அடையாளம் தெரியாமல் போய்விடக்கூடிய அபாயம் இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கூறுகிறார்.

தற்போது மலாய்க்காரர்களின் தலைவிதியைப் பற்றி யாரும் கவலைப்படாததால், போர் எதுவும் நடக்காமலேயே அவர்கள் இயல்பாகவே காணாமல் போகக்கூடிய அபாயம் இருப்பதாக துன் மகாதீர் குறிப்பிடுகிறார்.

நாடு நிறைய இழந்து விட்டது என்பது அனைவருக்கும் தெரியும். வடக்கில் ஒரு பகுதி / Riau- தீவு, சிங்கப்பூர், பினாங்கு ஆகிய நான்கு மாநிலங்களை இழந்துள்ளோம். போர் இல்லாமலேயே அந்நியர்கள், நம்மை சிறைப்பிடித்து விட்டதைப் போல் இருக்கிறது என்று துன் மகாதீர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்