பத்துமலைத் திருத்தல முதலாவது படிகட்டு, பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது

பத்துமலை திருத்தல தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முதலாவது படிக்கட்டு, நாளை ஜனவரி 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் 27 ஆம் தேதி சனிக்கிழமை வரையில் பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தைப்பூசத்தையொட்டி மேற்குகையில் குடிகொண்டு இருக்கும் வேலாயுதர் சன்னதிக்கு வழிபடவும், நேர்த்திக்கடனை செலுத்தவும் செல்லும் பக்தர்கள், படிகட்டில் வெறுங்காலுடன் செல்வதற்கு வசதியாக தனிப்படிக்கட்டு ஒதுக்கப்பட வேண்டும் என்று பக்தபெருமக்கள் விடுத்துள்ள கோரிக்கையைத் தொடர்ந்து தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜாவின் ஆலோசனையின் பேரில் மூன்று படிகட்டுகளில் முதலாவது படிகட்டு மட்டும், வெறுங்காலுடன் செல்லும் பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் தெரிவித்தார்.

முதலாவது படிகட்டில் பக்தர்களும், பொதுமக்களும், செருப்பு மற்றும் காலணியுடன் செல்வதற்கு இக்காலக்கட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. காலணியின்றி செல்லும் பக்தர்கள் மட்டுமே முதல் படிக்கட்டை பயன்படுத்த முடியும். இந்த நடைமுறை நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை அமலில் இருக்கும் என்று டத்தோ சிவகுமார் அறிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்