மலேசியாவின் மூன்று இஸ்லாமிய தன்னார்வ அமைப்புகளின் தலைவர்களை பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் சேர்ப்பதா?

மலேசியாவின் மூன்று அரச சாரா இயக்கங்களின் தலைவர்களை அமெரிக்காவின் புலனாய்வுத்துறையான FBI, பயங்கரவாத கண்காணிப்பு சோதனை பட்டியலில் சேர்த்து இருப்பதாக அறிவித்தது தொடர்பில் துல்லியமான விவரங்களை மலேசியா கோரும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

FBI அறிவித்துள்ள அந்த தகவலின் நம்பகத்தன்மை மற்றும் அதன் முழு விவரங்களை மலேசியா ஆராயும் என்று அவர் குறிப்பிட்டார். இவ்விவகாரம் தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படையின் தலைவர் டான்ஸ்ரீ razarudin Husain- னை தாம் தொடர்பு கொண்டுள்ளதாக சைபுடின் குறிப்பிட்டார்.

மேற்காசிய நாடுகளுக்கு மலேசியாவின் உதவிப் பொருட்களை கொண்டு சேர்க்கும் நாட்டின் தன்னார்வ இஸ்லாமிய தொண்டு அமைப்புகளை சேர்ந்த மூன்று தலைவர்களை FBI, “ terrorist Screening Center” பட்டியலில் சேர்த்து இருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் சைபுடீன் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்