கடப்பிதழ் தவணைக் காலம் அதிகரிக்கப்படலாம்

மலேசிய கடப்பிதழின் செல்லத்தக்க தவணைக் காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக அதிகரிப்பது குறித்து குடிநுழைவுத்துறை வாயிலாக உள்துறை அமைச்சு பரிசீலனை செய்து வருவதாக அதன் அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்துள்ளார்.

கடப்பிதழின் செல்லத்தக்க தவணைக் காலத்தை பல நாடுகள் 10 ஆண்டு காலமாக அதிகரித்து விட்டன. தாய்லாந்து, இந்தோனேசியா, பிலின்பைன்ஸ், சிங்கப்பூர் போன்ற தென்கிழக்காசிய நாடுகள் அவற்றில் அடங்கும்.

இதேபோன்று பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும் கடப்பிதழின் தவணைக்காலத்தை உயர்த்தி விட்டதாக அமைச்சர் Saifuddin Nasution சுட்டிக்காட்டினார். இன்று புத்ராஜெயாவில் Shaftbury கடப்பிதழ் அலுவலகத்தை திறந்து வைத்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் Datuk Ruslin Jusoh கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்து பேசிய அமைச்சர் Saifuddin Nasution, கடப்பிதழின் செல்லத்தக்க தவணைக்காலத்தை 10 ஆண்டுகளாக உயர்த்தும் பரிந்துரை மீதான ஆய்வு, ஏற்புடைய காலத்திற்குள் முடிவுறும் என்றார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்