மலேசிய அச்சக உரிமையாளர்கள் சங்கத்தின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குறியது

மலேசியாவில் அச்சுத் தொழிலை ஆதரிக்கும் ஒரு முக்கிய தூணாக மலேசிய அச்சக உரிமையாளர் சங்கம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது

நாடு முழுவதிலுமிருந்து 600 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, மலேசிய அச்சக உரிமையாளர் சங்கம் ஒரு குடையின் கீழ் உருவான வலுவான உறவுக்கு ஒரு சான்றாகும்.

தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த விரும்பும் முன்னணி உலகளாவிய வீரர்களிடமிருந்து மலேசியா அதிக ஆர்வத்தை ஈர்த்து வருவதால் இந்த அச்சக துறையில் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக தாம் கருதுவதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த சிங் தியோ தெரிவித்தர்.

பெப்பிம் எனப்படும் மலேசிய அச்சக உரிமையாளர் சங்கத்தின் 11வது பொங்கல் நல்லெண்ண விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகயில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், மலேசிய அச்சக உரிமையாளர் சங்கத்தின் கட்டட நிதிக்கு
அமைச்சர் கோபிந்த் சிங் டியோ 30,000 வெள்ளி மானியம் வழங்குவதாகவும் அறிவித்தார்.

மலேசிய அச்சக சங்கத்தின் தலைவர் சோலை பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் டமான்சாரா நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு சுரேஸ், மலேசிய இந்தியர் குத்தகையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜெனா, தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ பி.சகாதேவன், மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார், தெலுக் இந்தான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் எம்.மனோகரன், முன்னாள் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ தேவமணி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்