மலேசிய இந்தியர்களை மூன்றாம் தரப்பு பிரஜைகளை போல் அரசாங்கம் நடத்துவதா?

புத்ராஜெயா, ஏப்ரல் 01 –

மலேசியாவில் நீண்ட பாரம்பரியத்தையும், சமயப்பற்றையும் கொண்டுள்ள இந்து மதத்தை சேர்ந்த இந்தியர்களை, அரசாங்கம் மூன்றாம் தரப்பு பிரஜைகளைப் போல் வழிநடத்துவதாக உலகளாவிய மனித உரிமை சம்மேளத்தின் தலைவர் எஸ். சசி குமார் இன்று பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்துக்களையும், இந்து மதத்தையும் தொடர்ந்து சீண்டி, அவர்களின் மதத்தை புண்படுத்தி வரும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமய போதகர் ஜம்ரி வினோத் காளிமுத்து உட்பட இதர சமயப் போதகர்களுக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டும், , வழக்குக்கு மேல் வழக்குகள் தொடுக்கப்பட்டும், அந்த சமயப் போதகர்களுக்கு எதிராக அரசாங்கமும், சட்டத்துறை அலுவலகமும் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதித்து வருவது, வெறுப்பையும், சலிப்பையும் ஏற்படுத்துகிறது ? என்று சசி குமார் கேள்வி எழுப்பினார்.

ஜம்ரி வினோத் உட்பட சர்ச்சைக்குரிய இதர சமயப் போதகர்கள், இந்து மதத்தை இழிவுப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள காணொளிகள் குறித்து போதுமான ஆதாரங்களை சமர்ப்பித்தும், அவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்று தெனாவட்டாக எதிர்வினையாற்றி வரும் சட்டத்துறை அலுவலகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? இந்துக்களை கிள்ளுக்கீரையாக நினைக்க வேண்டாம் என்று சசிகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்ரி வினோத் காளிமுத்து மற்றும் இதர சர்ச்சைக்குரிய சமயப் போதகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, இன்று புத்ராஜெயாவில் சட்டத்துறை அலுவலகத்தில் முன் திரண்டு, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய சுமார் 300 க்கும் மேற்பட்டவர்வர்கள் முன்னிலையில் பேசிய சசிகுமார் இதனை தெரிவித்தார்.

சபா சரவாவை சேர்ந்த பூர்வகுடியினர் அமைப்புகளிள் பொறுப்பாளர்கள் உட்பட 20 க்கும் மேற்பட்ட பொது இயக்கங்களின் ஆதரவுடன் திரண்ட மக்கள், சட்டத்துறை அலுவலகத்தின் இரட்டைப் போக்கு கண்டிப்பதாக தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அனைத்து இனத்தவர்களும், சமயத்தவர்களும் சரிநிகராக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், இந்து மதத்தை சிறுமைப்படுத்தும் தனிநபர்களுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்காது ஏன் ? இஸ்லாமிய சமயப்போதகர்களை கண்டு அரசாங்கம் அஞ்சுகிறதா? என்று சசிகுமார் வினவினார்.

இவ்விவகாரத்தில் 4 அரசாங்கங்கள் ஊமையாக இருந்து வருவது அவற்றின் இரட்டை நிலைப்பாட்டையும், ஓரவஞ்சனையும் தெளிவாக காட்டுகிறது என்று சசிகுமார் சாடினார்.

இந்துக்களை அவமானப்படுத்தும் செயல்கள், இந்த நாட்டிற்குள் சக்கிர் நாயிக் எப்போது நுழைந்தாரோ, அன்று முதல் இந்துக்கள் தொடர்ந்து அவதிக்கப்பட்டு வருகிறனர். சக்கிர் நாயிக்- க்கும், ஜம்ரி விநோத்தும் இந்து சமயத்தை ஒப்பீடு செய்யத் தொடங்கிய காலத்திலிருந்து இப்பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்துக்களின் சகிப்புத்தன்மைக்கும் ஓர் அளவு இருக்கிறது என்பதையும் சசிகுமார் நினைவுறுத்தினார்.

இந்நிகழ்வில் இந்துக்களின் அதிருப்தியை வெளிப்படும் மகஜர் ஒன்றும் சட்டத்துறை அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்