புதன்கிழமை தொடங்கி 8.4 மில்லியன் மக்களுக்கு ரஹ்மா உதவி தொகை

கோலாலம்பூர், ஏப்ரல் 01 –

மக்களுக்கான அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட ரஹ்மா ரொக்க உதவித் தொகை வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி, புதன்கிழமை மொத்தம் 8.4 மில்லியன் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இம்முறை ரஹ்மா ரொக்க உதவித் தொகை 20 விழுக்காடு அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 1.26 பில்லியன் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் இவ்வாண்டு 1.5 பில்லியனாக அதிகரித்திருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு பெறுநர்களின் எண்ணிக்கை 9 மில்லியனாக உயர்ந்திருப்பதுடன் 60 சதவீதம் பெரியவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இது அமைவதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

ரஹ்மா ரொக்க உதவி தொகையை மக்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வருவதாக அவர் விளக்கமளித்தார்.

குறிப்பிடப்பட்ட தொகை பெறுநர்களின் வங்கியில் செலுத்தப்படுவதுடன் அந்த உதவி தொகை பேங்க் சிம்ப்பானான் நசியனால் (BSN) வங்கியின் மூலம் கட்டம் கட்டமாக கிடைக்கபெறும் என்று நிதி அமைச்சகத்தின் ஓர் அறிக்கையின் மூலம் பிரதமர் அன்வார் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்