மலேசிய இந்திய கலைஞர்களின் படைப்புகளை அதிகரிக்க அரசாங்கம் தொடர் முயற்சி தியோ

கோலாலம்பூர், ஏப்ரல் 4 –

தொடர்புத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மலேசிய ஒளிபரப்புத்துறையான RTM, மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான FINAS மற்றும் MyCreative Ventures ஆகியவை தொடர்ந்து மலேசிய கலைஞர்களின் படைப்புகளை மேம்படுத்தவும், அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மேலவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் மானிய வசதிகள், கலைஞர்களின் படைப்புகளை சந்தைப்படுத்துதல், திறன் மேம்பாடு போன்ற பல்வேறு முயற்சிகள் அமைச்சின் வழி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொடர்புத்தறை துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்துள்ளார்.

தவிர 2015 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை அமைச்சின் இலக்கவியல் நிகழ்ச்சிக்கான நிதி, டி.கெ.டி மூலம் கலை ஆர்வலர்களுக்கு மானிய வசதிகளை வழங்கி வருவதாக தியோ நி சிங் குறிப்பிட்டார்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு அதிக சாத்தியமுள்ள ஆக்கப்பூர்வமான மலேசிய படைப்புகளை கொண்டு சேர்ப்பதற்கு நம்மூர் கலைஞர்களுக்கு டி.கெ.டி வாய்ப்பு வழங்குகிறது. இதன் வழி கலைஞர்களின் வருமானத்தையும் உயர்த்துவதற்கான ஒரு நோக்கமாக .இது விளங்குகிறது என்று தியோ நி சிங் கூறினார்.

முன்னதாக, மலேசிய இந்தியக் கலைஞர்கள் கோவிட் காலத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிந்த நிலையில் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான தொடர்புத்துறை அமைச்சின் முயற்சிகள் குறித்து செனோத்தோர் டாக்டர் நெல்சன் ரெங்கனாதன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் தியோ நி சிங் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்