மலேசிய நீர் பகுதியில், ஈரானின் எண்ணெய்கள் கொண்டு செல்லப்படுவதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை! பிரதமர் கூறுகிறார்.

டோஹா, மே 15-

அமெரிக்கா விதித்துள்ள தடையைத் தொடர்ந்து, ஈரானின் எண்ணெய்கள், மலேசிய நீர் பகுதியில், கப்பல்களிடையே மாற்றம் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக மறுத்தார்.

மலேசியாவுக்கு அருகாமையிலுள்ள நீர் பகுதியில் அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டாலும், இதுவரையில் அதனை உறுதிபடுத்தக்கூடிய ஆதாரங்கள் ஏதும் இல்லை.

அத்தகைய நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஆற்றலையும் மலேசியா கொண்டிருக்கவில்லை என நேற்று நடைபெற்ற கத்தார் பொருளாதார கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பிரதமர் கூறினார்.

ஈரானின் எண்ணெய்களை கொண்டு செல்வதற்கான வசதியை, மலேசியா ஏற்படுத்தி தந்துள்ளதாக அமெரிக்கா வருத்தம் கொண்டுள்ளது தொடர்பில், நிகழ்ச்சி நெறியாளர் ஹஸ்லிந்தா ஆமின் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் அவ்வாறு கருத்துரைத்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்