மளிகைக் கடையில் பாராங் முனையில் மூதாட்டியிடம் கொள்ளை நான்கு இந்திய இளைஞர்களுக்கு தீவிர வலைவீச்சு

குவாலா லங்காட், மார்ச் 13 –

கடந்த ஞாயிற்றுக்கிழமை குவாலா லங்காட், ஜாலான் பந்திங் கிள்ளாங் சாலையில் தெலுக் பங்லிமா காராங் பகுதியில் மளிகைக்கடை ஒன்றில் இந்திய மூதாட்டியை பாராங் முனையில் அச்சுறுத்தி, 1,000 வெள்ளி ரொக்கத்தை கொள்ளையிட்டுச் சென்ற நான்கு இந்திய இளைஞர்களை பிடிப்பதற்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.

மாலை 4:32 மணியளவில் அந்த மளிகைக்கடையில் நிகழ்ந்த இக்கொள்ளை தொடர்பில் அந்த மூதாட்டியின் பேத்தியான அரசாங்க மருத்துவமனையில் மருத்துவராக பணிப்புரிந்து வரும் 26 வயது பெண் போலீசில் புகார் செய்திருப்பதாக Kuala Langat மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் அகமாட் ரிட்வான் மொகமாட் னோர் தெரிவித்தார்.

போரோடுவா அதிவா ரக சிவப்பு காரில் வந்த அந்த நான்கு இந்திய இளைஞர்கள் கையில் பாராங்கை வைத்திருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

முதலில், மளிகை கடையில் நுழைந்து அந்த மூதாட்டியை பாராங்கினால் மிரட்டிய கொள்ளையர்கள், கள்ளாபெட்டியிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கும்படி மிரட்டியதுடன் கடையை ஆராயத் தொடங்கினர்.

காலையிலிருந்து வியாபாரம் எதுவும் நடக்கவில்லை என்றும் பணம் இல்லை என்றும் அந்த மூதாட்டி கூறியது போது நகைகளை கொடுக்கும்படி மிரட்டியதுடன் கடையின் பின்புறம் மேல்மாடியில் உள்ள வீட்டில் இருக்கும் அந்த மருத்துவரின் தாயாரையும் தந்தையையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

நகைகள் எதுவும் இல்லை என்றுக்கூறி அந்த மருத்துவரின் தாயார் உரக்க கத்தியதை தொடர்ந்து மேல் மாடியிலிருந்து கீழே இறங்கிய கொள்ளையர்கள் மளிகை கடையில் மூதாட்டியிடம் 1,000 வெள்ளி ரொக்கத்தை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றதாக அக்மாட் ரிட்வான் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டம் 395 பிரிவின் கீழ் இக்கொள்ளை சம்பவம் விசாரணை செய்யப்பட்டு வரும் அதேவேளையில் நான்கு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்