வேலை மோசடியில் பலியாகியதால் போலீஸ் புகார்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13 –

7 மாதங்கள் காந்திருந்தும் தங்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க தவறிய முதலாளிகளுக்கு எதிராக நான்கு வங்காளதேச பிரஜைகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

நாட்டில் ஏழு மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாமல் தங்கியிருந்த 161 தொழிலாளர்களில் தாங்களும் அடங்குவதுடன் வேலையும் சம்பளமும் வழங்குவதற்கு தங்களின் முதலாளிமார்கள் தவறிவிட்டதாக அந்நபர்கள் செந்தூல் காவல்நிலையத்தில் தெரிவித்திருந்தனர்.

மலேசியாவிற்கு குடிநுழைந்த முதல் நாளிலிருந்து இன்றுவரையில் எந்தவொரு வேலையும், அதுக்குறித்து எந்தவொரு தகவலையும் அந்த வெளிநாட்டவர்களுக்கு தெளிவுப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட பிரஜைகளின் குடிநுழைவு அட்டையை அவர்களின் முதலாளிகள் கைப்பற்றி வைத்திருப்பதுடன் திரும்ப அதனைப் பெற வேண்டுமென்றால் 6,000 வெள்ளி செலுத்த வேண்டும் என்று விசாரணையில் மூலம் தெரியவந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்