மாசிமகம் உபயத்தாரின் மாசிமகம் திருவிழா

கோலாலம்பூர், பிப்ரவரி 22 –

கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் மாசிமகம் உபயத்தாரின் மாசிமகத் திருவிழாவும், இரத ஊர்வலமும், வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.

பிப்ரவரி 24 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பத்துமலைத்திருத்தல சுவாமி மண்டபத்தில் ஸ்ரீ கணேசப் பெருமான் மற்றும் ஸ்ரீ வரதராஜுப் பெருமான் எழுந்தருளி மாலை 6.00 மணிக்கு சிறப்புப் பூஜைகளுடன் மங்கள வாத்தியங்களுடன் பத்துமலைத் திருத்தலத்திலிருந்து இரதம் புறப்பட்டு பல்வேறு சாலைகளை கடந்த செந்தூல் பசார் சென்று, அதன் பின்னர் கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலை வந்தடையும் என்று தேவஸ்தானத் தலைவரும் மாசிமகம் உபய நாட்டாண்மையும், அறங்காவலருமான டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா தெரிவித்துள்ளார்.

பத்துமலையிலிருந்து இரத ஊர்வல புறப்பாடு, ஜாலான் ம்.ம்.ர் 2, ஜாலான் ஶ்ரீ பத்து கேவ்ஸ்,ஜாலான் 46/10,ஜாலான் செந்துல்,ஜாலான் ஈப்போ,ஜாலான் துவான்கு அப்துல் ரஹ்மான் ,ஜாலான் ராஜ,லேபு பாசார்,ஜாலான் பெட்டாலிங்,ஜாலான் துன் ஹ.ஸ். லீ ஆகிய 13 சாலைகளின் வாயிலாக அடியார்களுக்கு அருள்பாலித்து, நள்ளிரவு 12.00 மணிக்கு தாய்க்கோயிலான ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலை வந்தடையும் என்று டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

பக்தப் பெருமக்கள் அனைவரும் தவறாது வருகை தந்து இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கும்படி உபய நாட்டாண்மையான டான்ஸ்ரீ நடராஜா, உபயப்பிரதிநிதிகளான டத்தோ கு. செல்வராஜு, டத்தோ T. ராஜ்குமார் ஆகியோர் கேட்டுக்கொள்கின்றனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்