மேலும் 30 நாள் கால அவகாசம் நியாயமானதே

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 22 –

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் மற்றொரு மகனுக்கு வழங்கப்பட்டுள்ள 30 நாள் கால அவகாசம், மேலும் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டு இருப்பது ஏற்புடையதே என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான ஸ்.பி.ர்.ம் தலைமை ஆணையர் தான் ஶ்ரீ அஸ்மாம் பாகி தெரிவித்துள்ளார்.

அதில் பெரியளவில் சொத்துக்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், கால அவகாசத்தை ஸ்.பி.ர்.ம் மேலும் 30 நாட்களுக்கு நீடித்ததில் தவறு ஏதும் இல்லை என்று அஸாம் பாகி விளக்கினார்.

ஒவ்வொரு சொத்தையும் துல்லியமாக கணக்கிட வேண்டியிருப்பதால் ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசம் போதவில்லை என்று தான் ஶ்ரீ மோக்சானி கேட்டுக்கொள்டுள்ளார்..

தவிர மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் மோக்சானியும் அவரின் அண்ணன் மிர்சான்னும் ஸ்.பி.ர்.ம் மிற்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இந்த கால அவகாசம் போதவில்லை என்றும் மேலும் அவகாசம் வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

நாட்டில் உள்ள மற்றும் வெளிநாட்டில் உள்ள தங்களின் அசையும், அசையா சொத்துக்களை ஸ்.பி.ர்.ம் மிடம் அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமரின் இரண்டு மகன்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பில் அவர்களின் சொத்து விவரங்களை ஸ்.பி.ர்.ம் கோரியுள்ளதாக அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்