மாணவன் உயிரிழந்த சம்பவம் வெளிப்படையான விசாரணை ஐஜிபி உத்தரவாதம்

ஈப்போவில் 17 வயது மாணவன், போலீஸ் அதிகாரியின் காரில் மோதப்பட்டு, உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை வெளிப்படையாக நடைபெறும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் இன்று உத்தரவாதம் அளித்துள்ளார்.

இச்சம்பவம் விசாரணை வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்று பேரா மாநில போலீஸ் தலைவர், ஈப்போ மாவட்ட போலீஸ் பிரிவு மற்றும் புக்கிட் அமான் போக்குவரத்து போலீஸ் பிரிவு ஆகியவற்றுக்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக ஐஜிபி. விளக்கினார்.

மாணவனை காரில் மோதி தள்ளியதாக கூறப்படும் கெடா மாநில போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி, துணை சுரிதெண்டன்அந்தஸ்தை கொண்டிருந்த போதிலும் எவ்வித ஒளிவுமறைவின்றி விசாரணை நடைபெறும் என்று ரஸாருதீன் உசேன் தெரிவித்தார்.

அதேவேளையில் முதிர் நிலை போலீஸ் அதிகாரி என்பதால் அவருக்கு சிறப்பு கவனிப்பு எதுவும் இருக்காது என்று அவர் உறுதி அளித்தார்..

இவ்வாண்டு எஸ்.பி.எம் தேர்வில் அமர்ந்துள்ள சஹரிஃப் அஃபென்டி சம்ரி என்ற அந்த மாணவன், நேற்று மதியம் பள்ளி முடிந்து, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த போது, புரோடுவா அதிவா காரில் பயணித்த 44 வயதுடைய அந்த போலீஸ் அதிகாரி, அந்த மாணவனின் மோட்டார் சைக்கிளையை மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.

மாணவனை மோதி தள்ளியப் பின்னர் அங்கிருந்து தப்பிய அந்த போலீஸ் அதிகாரிக்கு எதிராக நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் அவர் கெடா, தாமான் ஜத்தி யில் , போலீசாரின் சாலைத்தடுப்பு சோதனையில் பிடிபட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்