மாணவரை போலீஸ் அதிகாரி கொன்ற வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

ஈப்போ, மார்ச் 21 –

மாணவரை போலீஸ் அதிகாரி கொன்ற வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

17 வயதுடைய மாணவருக்கு மரணம் விளைவித்ததாக காவல்துறையின் மூத்த அதிகாரி மோஹ்த். நஸ்ரி அப்துல் ரசாக் மீதான வழக்கை, ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக இன்று அறிவித்துள்ளது.

அரசு வழக்கறிஞர் தரப்பில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கையை ஏற்று அத்தீர்ப்பை வழங்கிய மாஜிஸ்திரேட் S. புனிதா, உயர்நீதிமன்றத்தில் அவ்வழக்கின் மறுசெவிமடுப்புக்கான தேதியை நிர்ணயிக்கவில்லை.

கடந்தாண்டு டிசம்பர் 15ஆம் தேதி மதியம் 12.05 முதல் 12.40 வரையிலுள்ள இடைப்பட்ட காலத்தில், ஈப்போ, ஜாத்தி இடைநிலைப்பள்ளிக்கு அருகில், டிஎஸ்பி பதவியைக் கொண்ட அந்த போலீஸ் அதிகாரி அக்குற்றத்தை புரிந்ததாக இதற்கு முன்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

மோட்டார்சைக்கிளில் வந்த முகமது ஜாஹாரிப் அஃபேன்டி முஹ்த் சம்ரி எனும் மாணவரை, அவர் தனது வாகனத்தால் மோதி தள்ளி இழுத்துச் சென்றதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது, நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்