மாணவர்களை ஆசிரியர் கடிப்பதா? விசாரணை செய்யப்படும்

கிழக்கு கரையோர மாநிலத்தை சேர்ந்த பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கடிப்பதாக கூறப்படும் புகார் தொட​ர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று கல்வி துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக கூறப்படும் மாணவன் ஒருவன் தெரிவித்துள்ள புகார் அடிப்படையில் இவ்விவகாரம் தற்போது ஆராயப்பட்டு வருவதாக துணை அமைச்சர் குறிப்பிட்டார்.

அந்த குற்றச்சாட்டில் உ​ண்மையிருக்குமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். ஆசிரியர் கடித்ததால் தமது ஆறு வயது மகன் பள்ளிக்கு செல்ல மறுக்கிறான் என்று மாது ஒருவர் தெரிவித்துள்ள புகார் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று லிம் ஹுய் யிங் குறிப்பிட்டார்.

மாணவர்களின் வாய், காது மற்றும் கைகளில் அந்த ஆசிரியர் கடிப்பதாகவும், சில மாணவர்கள் அந்த ஆசிரியரின் பற்கடிகளுக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்