மாமன்னரின் பிறந்த தினத்திற்கு பொது விடுமுறை

புத்ராஜெயா, மே 17 –

மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் ஜுன் 3 ஆம் தேதி பொது விடுமுறை நாளாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் மாமன்னரின் இவ்வாண்டுக்கான பிறந்த தின கொண்டாட்டம், வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் ஃபாமி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

மாமன்னரின் அரியணை விழா, வரும் ஜுலை 20 ஆம் தேதி நடைபெறவிருப்பதால் அவ்விழாவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பிறந்த தின கொண்டாட்டம் செப்டம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்