பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கஸக்ஸ்தான் சென்றடைந்தார்

அஸ்தானா, மே 17 –

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கஸக்ஸ்தான் நாட்டிற்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு, மலேசிய நேரப்படி மாலை 5 மணியளவில் தலைநகர் அஸ்தானாவை சென்றடைந்தார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் சிதறலையடுத்து இறுதியாக விடுதலைப்பெற்ற நாடான கஸக்ஸ்தானுக்கும், மலேசியாவிற்கும் இடையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்டிக்காக்கப்பட்டு வரும் இருவழி உறவை வலுப்படுத்தும் வகையில் பிரதமரின் இந்த அதிகாரத்துவப் பயணம் அமைந்துள்ளது.

பிரதமர், பயணம் செய்த விமானம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் நர்சுல்தான் நசர்பயேவ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அந்த மத்திய ஆசிய நாட்டிற்கான பிரதமரின் அதிகாரத்துவப் பயணத்தில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் உட்பட முக்கிய அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்