மார்ச் 1 முதல் னாடி அறிமுகம்

பார்சீலோனா, பிப்ரவரி 26 –

பேடி என்றழைக்கப்படும் டிஜிட்டல் பொருளாதார மையம் அடுத்த மாதம் மார்ச் 1 ஆம் தேதி முதல் தேசிய தகவல் விநியோக மையமாக னாடி என்றழைக்கப்படும் என்று தொடர்பு அமைச்சர் பாஹ்மி பட்சில் அறிவித்தார்.

நாடு முழுவதும் முன்னதாக அறிமுகமாகிய பேடி யின் கீழ் 911 மையங்கள் இருந்ததாகவும் மேலும் இவ்வாண்டு 186 மையங்கள் அதிகரிக்கப்படும் என்று பாஹ்மி பட்சில் கூறினார்.

இதுக்குறித்து தொடர்பு மற்றும் பல்லூட ஆணையமான ம்.சி.ம்.சி நாடு முழுவதும் உள்ள னாடி யின் மேலாளர்களை தொடர்பு கொண்டு அறிவிப்புகளை வெளியிடுவதுடன் சில பிராண்டின் அம்சங்கள் தரமாகவும் நல்ல முறையில் செயல்படுவதை உறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பேடி யை னாடி யாக அறிமுகப்படுத்துவதுடன் சில திட்டங்களும் மீண்டும் செயல்படுத்தவுள்ளதாக பாஹ்மி பட்சில் மேலும் விளக்கமளித்தார்.

அரசாங்க உதவியுடன் அரசு சார்ந்த திட்டங்கள் மற்றும் மக்களுக்கான ஏ.ய் போன்ற முன்முயற்சிகள் பற்றிய புரிதலை சமூதாயத்திடம் கொண்டு செல்வதே எங்களின் பிரதான ஒன்று என பாஹ்மி பட்சில் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்