மாஸ்கோ துப்பாக்கிச்சூடு, 100-க்கும் மேற்பட்டோரை காப்பாற்றிய 15 வயது சிறுவன்.

மாஸ்கோ, மார்ச் 27-

மாஸ்கோவின் சிட்டி ஹாலில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட மக்களை காப்பாற்றிய 15 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள ஒரு சிட்டி ஹாலில் கடந்த 22 ஆம் தேதி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சுமார் 143 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் குறித்த தகவல் வெளியாகி உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சிறுவன் ஒருவர் அந்த சிட்டி ஹாலில் இருக்கும் மக்களை காப்பாற்றும் வீடியோ வெளியாகி வைரலானது. அந்த சிறுவன் பெயர் இஸ்லாம் கலிலோவ். 15 வயதே ஆன இவர் அங்குள்ள ஒரு கடையில் பகுதிநேர சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். அப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியபோது அங்கிருந்த 100-க்கும் மேற்பட்ட மக்களை அவர் பாதுகாப்பாக வெளியேற்றினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்