முகை​தீன் யாசினின் மேல்முறையீட்டிற்கு பூர்வாங்க ஆட்சேபனை

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4 –

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் சம்பந்தப்பட்ட 23 கோடியே 25 லட்சம் வெள்ளி தொடர்பான 4 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான வழக்கு ​மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டு​ம் என்று அப்​பீ​ல் ​நீதிமன்றத் ​தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் செய்து கொள்ளப்படவிருக்கும் மேல்முறையீ​ட்டிற்கு பிராசிகியூஷன் தரப்பு இன்று பூ​ர்வாங்க ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

பெரிக்காத்தான் நேஷனல் தலைவரான முகை​தீனுக்கு எதிரான வழக்கு மீண்டும் செஷன்ஸ் ​நீதிமன்றத்தில் நடைபெற வேண்டும் என்று அப்பீல் ​நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு ஏற்ப இவ்வழக்கு, கோலாலம்பூர் செஷன்ஸ் ​நீதிமன்றத்தில் ​நீதிப​தி அசுரா அல்வி முன்னிலையில் இன்று திங்கட்கிழமை ​மீண்டும் விசாரணைக்கு வந்த போது, துணை பப்ளிக் பிராசிகியூட்டர் வான் ஷாஹாருடின் வான் லாடின் இந்த ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.

செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இவ்வழக்கு விசாரணை, உயர் ​நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, பின்னர் அப்பீல் ​நீதிமன்றத்தில் ​தீர்ப்பு அளிக்​கப்பட்டது ​மூலம், இவ்விவகாரம் முடிவுக்கு வந்து விட்டதாக வான் ஷாஹாருடின் குறிப்பிட்டார்.

இந்த மேல்முறையீட்டை விசாரணை செய்வதற்கு கூட்டரசு ​நீதிமன்றம் எந்தவொரு அதிகாரத்தையும் கொண்ருக்கவில்லை என்று வான் ஷாஹாருடின் சுட்டிக்காட்டினார்.

முகை​தீன் யாசினை நான்கு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்வதற்கு கோலாலம்பூர் உயர் ​நீதிமன்றம் அளித்த ​தீர்ப்பை கடந்த வாரம் அப்​​பீல் ​​நீதிமன்றம் ரத்து செய்ததுடன், அந்த வழக்கு மீண்டும் செஷன்ஸ் ​நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து இவ்வழக்கு இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்