முடத்தன்மைக்கான திட்டம் அந்நியத் தொழிலாளர்களுக்கும் விரிவாக்கம்

சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் முடத்தன்மைக்கான இழப்பீட்டு அனுகூலத்தை வழங்கும் SKIM KEILATAN திட்டம், அந்நியத் தொழிலாளர்களுக்கும் விரிவுப்படுத்துவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்துள்ளார்.

இந்த சமூக நல உதவித் திட்டம், மலேசியாவில் வேலை செய்து வரும் அந்நியத் தொழிலாளர்களின் நலனை காக்கவும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் அத்திட்டம் அவர்களுக்கும் விரிவுப்படுத்தவிருக்கிறது என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

இன்று புத்ராஜெயாவில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில்- லுடன் இணைந்து அந்நியத் தொழிலாளர்களுக்கான நிர்வாகக்குழு கூட்டத்திற்கு தலைமையேற்றப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுவையில் அமைச்சர் ஸ்டீவன் சிம் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்