இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கடந்த வெள்ளிக்கிழமை மாமன்னரை சந்திப்பதற்காக இஸ்தானா நெகாராவிற்குள் நுழைய முயற்சி செய்தாக கூறப்படும் இரு ஆடவர்கள் இன்று கோலாலம்பூர் நீதிமன்றதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

குற்றவியல் சட்டம் 447 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த இருவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

1958 ஆம் ஆண்டு அபாயகர ஆயுதம் சட்டத்தின் கீழ் அந்த நபர்களுக்கு எதிராக மற்றொரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்துள்ளார்.

அந்த இருவரும் அரண்மனைக்குள் நுழைய முயற்சி செய்ததற்கான நோக்கத்தை கண்டறிய முடியவில்லை என்று ருஸ்டி முகமட் இசா குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்