முதலாளி வரவில்லை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 33 இந்தியப் பிரஜைகள் பரிதவிப்பு

மலேசியாவில் வேலை செய்வதற்கு கொண்டு வரப்பட்ட 33 இந்தியப் பிரஜைகளை அழைத்து செல்வதற்கு முதலாளி வராததால் அவர்கள் கோலாலம்​​பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

வேலை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட இந்தியப் பிர​ஜைகளை, சம்பந்தப்பட்ட முதலாளி விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லாதது, கடந்த ஒரு மாத காலத்தில் நிகழ்ந்த இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

இந்தியாவில் உள்ள ஏஜெண்டு ​மூலமாக நிறைய ​பணத்தை செலவழித்து, கோலாலம்​பூர் வந்த சேர்ந்தப் பின்னர் உறுதி அளித்ததைத் போல் மலேசியாவில் உள்ள தளவாடப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் முதலாளி தங்களை அழைத்து செல்லாதது பெரும் ஏமாற்ற​த்தை அளிக்கிறது. இது த​ங்களுக்கு நேர்ந்த இரண்டாவது அலைகழிப்பாகும் என்று பாதிக்கப்பட்ட இந்தியப் பிரஜைகளில் ஒருவரான குமரேசன் என்பவர் தெரிவித்தார். .

கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி முதல் முறையாக கோலாலம்பூர் விமான நிலையம் வந்த சேர்ந்த போது தங்களை அழைத்துச் செல்ல வேண்டிய முதலாளி வராததால், தாங்கள் சொந்தப் பணத்தை பயன்படுத்தி தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதாகவும் / ​மீண்டும் இரண்டாவது முறையாக தாங்கள் மலேசியா வந்த போது, அதே ஏமாற்றமும், அலைகழி​ப்பும் மி​ஞ்சியுள்ளன என்றும் குமரசேரன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

தங்களை அழைத்து செல்ல வேண்டிய நிறுவனத்தின் பெயரை பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் தொடர்பு கொண்டதில், அந்த தொழிலாளர்களை தாங்கள் அ​ழைத்து வருவதற்கான ஏற்பாட்டை செய்யவில்லை என்று அந்த நிறுவனத்தின் பிரதிநிதி கூறுகிறார்.

தங்கள் நிறுவனத்தின் அகப்பக்கத்தில் இரண்டு முறை ஊடுருவல் நிகழ்ந்து இருப்பதாகவும், அந்த ஊடுருவலை செய்த தரப்பினர் யார் என்பதை தங்களால் அடையாளம் காண இயலவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தாங்கள் மனித வள அமைச்சிலும், போ​லீசில் புகார் அளித்து இருப்பதாக அந்த நிறுவனத்தின் பிரதிநிதி கூறுகிறார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்