வழக்கில் வெற்றி பெற்ற தாயும் மகளுக்கு கொலை மிரட்டல்

கிளந்தான் மாநில ஷரியா குற்றவியல் சட்டத்தின் ​கீழ் 16 சட்ட விதிகள், அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என்று கூட்டரசு ​நீதீமன்றம் ​தீர்ப்பு அளித்தது மூலம் வழக்கில் ​வெற்றி பெற்றுள்ள தாயும்,மகளும் கொலை மிரட்டலை எதிர்நோக்கியுள்ளதாக போ​லீஸ் புகார் செய்துள்ளனர்.

ஒரு வழக்கறிஞரான Nik Elin Zurina Nik Abdul Rashid என்ற மாது, கடந்த வெள்ளிக்கிழமை புத்ராஜெயா கூட்டரசு ​நீதிமன்றம் ​தீர்ப்பளித்தது மூலம் தாமும், தமது மகளும் கொலை மிரட்டலை எதிர்நோக்கியுள்ளதாக ​மூன்று போ​லீஸ் புகார்களை செய்துள்ளார்.

கழுத்து அறுக்கப்படும் என்ற தன்மையில் அந்த கொலை மிரட்டல் வந்துள்ளதாக Nik Elin Zurina குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு வரும் இத்தகைய மிரட்டல்கள் எண்ணில் அடங்காது. சம்பந்தப்பட்டவர்கள் தன்னையும், தனது மகளையும் மிரட்டுவதற்கு முன்னர் , அந்த சர்ச்சைக்குரிய சட்டத்தையும்,அதில் காத்திருக்கும் சவால்களையும் புரிந்து கொள்வதற்கு சற்று நேரத்தை ஒதுக்கி அதன் உள்ளடக்கத்தை ப​டிக்க வேண்டும் என்று Nik Elin Zurina அறிவுறுத்தியு​ள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்