முதல் மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பூனை

கோலாலம்பூர், ஜன – 5,

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செராசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முத மாடியில் இருந்து பூனை ஒன்றை வீசி எறிந்ததாக இல்லத்தரசி மீது இங்குள்ள் செஷன் நீதிமன்றத்தில் குற்றஞ்சட்டப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டை அம்மாது மறுத்துள்ளார்.

கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி காலை மணி 7.35 மணி அளவில் 44 வயதான Nina Norhaslinda Mazlan இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. விலங்குகள் நலச் சட்டம் 2015இன்படி, 20 ஆயிரம் வெள்ளி முதல் ஒரு லட்சம் வெள்ளி வரை அபராதமோ அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டுமே குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது விதிக்கப்படலாம்.

கோலாலம்பூர் கால்நடை மருத்துவ சேவைகள் துறையின் வழக்குரைஞர், Fadzilah Abdul Karim, குற்றம் சாட்டப்பட்டவரின் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் தமது வருகையை உறுதிப்படுத்த வேண்டும் ஆகிய  கூடுதல் நிபந்தனையுடன் 15 ஆயிரம் வெள்ளி ஜாமீன் வழங்க பரிந்துரை செய்தார்.

வழக்கறிஞர் ஆஜராகாத Nina, தமது ஜாமீன் தொகையைக் கொறைக்குமாறு கோரினார். 10 வெள்ளி ஜாமீனில் அவர் விடுவிக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதி Norina Zainol Abidin, எதிர்வரும் பிப்ரவரி 6ஆம் நாள் இந்த வழக்கு செவிமெடுப்புக்கு வருவதாகவும் சொன்னார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்