40 வயதுக்குட்பட்டவர்களின் மரண எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர், ஜன – 5,

திடீர் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றால் 40 வயதுக்கும் உட்பட்ட அதிகமான மலேசியர்கள் திடீர் மரணத்தைச் சந்திக்கிறார்கள் என Heart Bit E-ECP சுகாதார நிலையத்தின் தோற்றுநர் டாக்டர் எஸ் டினேஷ் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றுத் தாக்கத்தால் நாடு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்கீழ் இருந்தது. அதிக காலம் உடல் பயிற்சிகளில் ஈடுபடாமல், திடீரென உடல் பாகங்களின் நடவடிக்கைகள் அதிகரிப்பதால், இந்த திடீர் மரணம் எற்படுவதாக டாக்டர் எஸ் டினேஷ் குறிப்பிட்டார்.

அதிக காலம் நடவடிக்கைகள் குறைவாக இருந்து, திடீரென தீவிரமாக உடற்பயிற்சி போன்ற நடவடிக்கைகள் ஈடுபட்டால், உடலில் அதிர்ச்சி ஏற்பட்டு இவ்வாறான ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய சாத்தியம் இருப்பதை டாக்டர் எஸ் டினேஷ் சுட்டிக் காட்டினார்.

அதிக ரத்த அழுத்தம் தூக்கமின்மை, மரபனு வழியில் இதய நொர் போன்றவையும் இந்த பாதிப்புக்குக் காரணமாக அமைகின்றன.

இதற்கான அறிகுறிகள் கண்டறியப்படுவது அவ்வளவு எளிது அல்ல எனக் குறிப்பிடும் அவர், ஆரோக்கியமான வாழ்க்கை முறையாலும், சீரான உணவுப் பழக்கத்தாலும் அந்த ஆபத்தைக் குறைக்க முடியும் என்றார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்