முன்னாள் தலைமை நீதிபதி வழக்கறிஞராக மாறினார்

நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி துன் முகம்மட் ரவுஸ் ஷாரிஃப் ஒரு வழக்கறிஞராக, வழக்குரைஞராக மலாயா உயர் நீதிமன்றத்தில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

பணி ஓய்வுப்பெற்றவரான 72 வயது முகம்மட் ரவுஸ், உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சால்லே முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

1976 ஆம் ஆண்டு சட்டத்துறையின் கீழ் ஒரு வழக்கறிஞராக முகம்மட் ரவுஸ் செயல்படுவதற்கு மலேசிய வழக்கறிஞர் மன்றமும் அங்கீகாரம் வழங்கியுளளது.

1951 ஆம் ஆண்டில் நெகிரி செம்பிலான், ரெம்பாவில் பிறந்து வளர்ந்தவரான முகம்மட் ரவுஸ், 1994 ஆம் ஆண்டு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நீதித்துறை ஆணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இவர் 2017 ஏப்ரல் மு தல் 2018 ஜுலை வரை நாட்டின் எட்டாவது தலைமை நீதிபதியாக பொறுப்பில் இருந்தவர் ஆவார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்